truetamilnews.com

சென்னை: தமிழக சுழற்பந்துவீச்சாளர் பிரசாந்த் ராஜேஷ் 35. கடந்த 2018ல் நடந்த தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடரில் கோவை அணியில் அறிமுகமான இவர், திருநெல்வேலியில் நடந்த காரைக்குடி அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.

இப்போட்டியில், ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், கோவை அணி சார்பில் பங்கேற்றார். தவிர இவர், உள்ளூர் போட்டிகளில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன், 19 வயதுக்குட்பட்ட தமிழக அணிகளுக்காக பங்கேற்றுள்ளார்.இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ராஜேஷ் மரணம் அடைந்தார்.

இந்தியாவின் தமிழக ‘சீனியர்’ சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘ராஜேஷ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.தற்போது நீங்கள் இல்லை என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. போட்டி முடிந்த பின் நாம் பேசிய உரையாடல்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்,’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks