truetamilnews.com

வீட்டின் நிலையைப் புரிந்துகொண்ட பத்மபிரியா, “சித்தா டாக்டருக்கு படிக்க நிறைய செலவாகும், நமக்கு இதெல்லாம் சரிப்படாதும்மா. நான் வேற ஏதாவது படிக்கிறேன்” என்றிருக்கிறார். “தெரிஞ்ச சனங்ககிட்ட கடன உடன வாங்கிக்கலாம், பத்தாததுக்கு நாலு பேருகிட்ட உதவி கேட்கலாம். எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன், படிப்பு முடியுறவரைக்கும்தானே கஷ்டம்? அப்புறம் எல்லாம் சரியாயிடும், நீ கவலைப்படாம படி” எனக் கல்லூரியில் சேர்த்துள்ளார் அவர் அம்மா காந்திமதி. எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளுடன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கால் பதித்தார் பத்மபிரியா.

தன் சக்திக்கு முடிந்த அளவு வேலை செய்ததுடன், ஈர மனம் கொண்ட சிலரிடம் உதவி பெற்றும் பத்மபிரியாவை படிக்க வைத்தார் காந்திமதி. இப்படியே இரண்டு வருடப் படிப்பு முடிந்துவிட்டது. மூன்றாவது வருடத்தில், கொரோனா பொது முடக்கம் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

பீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவி

பத்மபிரியாவால் கல்லூரிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. கொரோனா லாக்டெளன் எல்லோரையும் பொருளாதார சிக்கலில் தள்ளியதில் பத்மபிரியாவிற்கான உதவி கிடைக்கவில்லை. இதனால் தன் கனவான சித்த மருத்துவப் படிப்பு கேள்விக்குறியான நிலையில், படிக்க வழியில்லாமல் கண்கள் கசிய வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார்.

பத்மபிரியாவிடம் பேசினோம். ”அப்பா குணசேகரன் மாற்றுத்திறனாளி, எந்த வேலைக்கும் செல்ல முடியாது. அம்மா காந்திமதி விவசாயக் கூலி வேலை செய்றாங்க. அதுல கிடைக்கும் வருமானத்துலதான் குடும்பம் ஓடுது. குடிசை வீடு, 3 ஆடு, ஒரு பசு மாடு. இதுதான் எங்க சொத்து. சின்னவயசுலயிருந்தே நான் நல்லா படிப்பேன். நான், தங்கை, தம்பினு நாங்க எல்லாரும் படிச்சு பெரிய ஆளா வரணும், அப்போதான் எங்க கஷ்டமெல்லாம் தீரும்னு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks