truetamilnews.com

வாஷிங்டன்: டிரம்புக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து, அதிபர் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்த மாதம், 3ல் நடக்கவுள்ளது. இதற்காக குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தற்போது டிரம்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் தேர்தல் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், டிரம்பிற்கு பதிலாக, வேறு ஒருவர், குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், இதுவரை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதும் இல்லை; வேட்பாளர் மாற்றப்பட்டதும் இல்லை என, தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks