truetamilnews.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. கரோனா லாக்டவுன் காரணமாக மார்ச் மாதமே தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 1 மிகப்பெரிய ஹிட் ஆனது. ஆனால் அதன் பிறகு வெளியான இரண்டு சீசன்களும் முதல் சீசன் போல அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதன் காரணமாக இந்த முறை போட்டியாளர்களை தேர்வு செய்வதில், பிக்பாஸ் குழு அதிக கவனம் செலுத்தியுள்ளது. 

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர போட்டியாளர்களை பல துறைகளில் இருந்து தேர்வு செய்துள்ளனர். செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர், பாடகர், பாடிபில்டர், நடிகை, இன்ஸ்டா புகழ் பிரபலம் என பலர் உள்ளனர்.

முதல் போட்டியாளராக களம் இறங்கிய ரியோ ராஜ் விஜய் டிவியில் தொகுப்பாளராக உள்ளார். இந்த முறை விஜய் டிவி பிரபலங்கள் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளனர். அறந்தாங்கி நிஷா, ரியோ ராஜ், வேல்முருகன், ஆஜித், ரேகா, ஷிவானி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் அடங்குவர். ஷிவானி விஜய் டிவி சீரியலான பகல் நிகவு மூலம் பிரபலமானவர். 

அதன்பிறகு ஜீ தமிழ் சேனலின் இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். ஆனால் பாதியிலேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். ஆனாலும் இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

16 போட்டியாளர்களின் லிஸ்ட்

1. ரியோ ராஜ்

2. சனம் ஷெட்டி

3. ரேகா

4. பாலா

5. அனிதா சம்பத்

6. ஷிவானி நாராயணன்

7. ஜித்தன் ரமேஷ்

8. வேல்முருகன்

9. ஆரி அர்ஜூனன்

10. சோம்

11. கேப்ரில்லா

12. அறந்தாங்கி நிஷா

13. ரம்யா பாண்டியன்

14. சம்யுக்தா

15. சுரேஷ் சக்ரவர்த்தி

16. ஆஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks