truetamilnews.com

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் நீல சட்டை மாறன் விமர்சனங்களுக்கும் விமர்சனம் எழுதவேண்டிய நிலைக்கு திரையுலகம் தள்ளப்பட்டுவிட்டது.

திரைவிமர்சனம் என்கிற பெயரில் சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டு காய்ச்சி எடுக்கும் நீல சட்டை மாறனை பதிலுக்கு ஒரு இயக்குநர் போட்டு காய்ச்சி எடுதிருக்கிறார்.

விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்திற்கு நீல சட்டைமாறன் செய்திருக்கும் விமர்சனத்தை பார்த்து கொதித்துப்போன அப்படத்தின் இயக்குநர் பெ.விருமாண்டியும் , டயலாக் ரைட்டர் ஷண்முகம் முத்துச்சாமி இருவரும் சேர்ந்து தங்களது உணர்வுகளை இரண்டு பக்க அறிக்கையாக தட்டிவிட்டிருக்கிறார்கள்.

உலகின் ஆகச்சிறந்த அறிவாளி அண்ணன் நீல சட்டை மாறன் அவர்களுக்கு, என்று தொடக்திலேயே மாறனை போட்டு வெளுத்திருக்கிறார் இயக்குநர் விருமாண்டி.

”நாங்கள் எடுத்துக்கொண்ட கதை என்ன என்பதை புரிந்து கொள்ளும் பேராற்றல் படைத்த மகா விஞ்ஞானியான தங்களூக்கு நாங்கள் திரைக்கதையாகவும் காட்சியாகவும் என்ன சொல்லியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தங்களின் பெருமூளை மழுங்கி மட்டையாகி போனது கண்டு மிகவும் வேதனையடைந்தோம்.

ஒரு பெண் தன் கணவன் மீது எவ்வளவு பெருங்காதல் கொண்டிருப்பாள் என்பதை ஒருசில வார்த்தைகளால் உங்களைப்போல அதிமேதாவித்தனமாக பேசிப்புரியவைக்க முடியாமல் , சில காதல் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு உணரவைக்க முயன்றதற்கு வருந்துகிறோம். காதல் காட்சிகளின் ஊடே கதாநாயகன் என்ன காரணத்திற்காக நீரோட்டம் பார்க்கும் வேலையை செய்யும் விதமாக காட்சியமைத்திருக்கிறோம் என்பதும் உங்கள் கணமான தலையில் ஏன் ஏறவில்லை என்று புரியவில்லை.

வெளிநாட்டு வேலைக்கு செல்வோரை வைத்து இங்கு ஏன் வேலை இல்லை? எதனால் வேலை இல்லை? யாரால் வேலை இல்லை? என்று பேசியிருக்கிறோம். அதை கவனிக்காமல், படம் பார்க்கும்போது குறட்டை விட்டு தூங்கி உள்ளீர்கள் என்பதை ரணசிங்கம் பட விமர்சனம் செய்யும் காணொளியில் தாங்கள் சோர்வாக இருப்பதன் மூலம் உணரமுடிகிறது.


அரசு அலுவலர்கள் எல்லோரும் கதை நாயகிக்கு உதவி செய்கிறார்களாம்? என் கதைக்கு எதிராக நானே திரைக்கதை அமைத்துள்ளேனாம். வயது ஏற ஏற மூளை தடுமாற்றம் ஏற்பட்டு சுய சிந்தனை தப்பி உளறுவது இயற்கைதான் பாவம் அந்த நிலைக்கு நீங்கள் வந்துவிட்டது கண்டு எங்கள் கண்கள் குளமானது.

படத்தில், ”இங்கு இருக்கும் அத்தனை அரசு துறைகளும் சாமான்ய மனிதர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காது, மறுக்காது மாறாக ஏற்றுக்கொள்வது போல் நடிக்கும். எதாவது காரணம் சொல்லி நம்மை அலைகழிக்கும்”என்று குணசேகரன் கதாபாத்திரம் சொல்லும். அதையும் கவனிக்காமல் உங்கள் காணொலி விளம்பரத்திற்காக யாரிடம் கையேந்தி யாசகம் செய்துகொண்டிந்தீர்களோ தெரியவில்லை.

நாடகத்தனமாக படம் எடுத்ததற்கு மன்னிக்கிக்கவும். உங்களிடம் பயிற்சி பெற்று எதிர்காலத்தில் நிச்சயம் உலக இயக்குநர்களின் வரிசையில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

பொடுதலை கதைக்கு செலவிட்ட நேரத்தில் சற்று விமர்சனத்திற்காக எடுத்துக்கொண்ட திரைப்படத்திற்கும் செலவிட்டிருந்தால் ஒருவேளை இது சுமாரான விமர்சனமாக வந்திருக்க வாய்புண்டு” என்று நீல சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்திருக்கும் இயக்குநர்,

”நேரம் இருந்தால், நெஞ்சில் உரமிருந்தால் நேரடியாக வாதிக்க தயார்”என்றும் சவால் விட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks