truetamilnews.com

சென்னை: சென்னையை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் பூபாலன், கடந்த 2017ல் செங்குன்றம் சாலையில் பைக்கில் சென்றபோது, வேகமாக வந்த டிரக் மோதி இறந்தார். இதையடுத்து, டிரக் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள நிறுவனத்திடம் இழப்பீடு கோரி ஜெயலட்சுமி சென்னை விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விபத்து 2வது நீதிமன்றத்தில் நீதிபதி பி.ரேவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் விபத்தில் பலியான பூபாலனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘விபத்தில் பலியானவர் ஒரு பிஸ்கெட் கம்பெனி யில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்று மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.

அவரது வருமானம், வயது ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் பூபாலனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், இழப்பீடு தொகையில் 10 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks