truetamilnews.com

தொடர் தோல்வி காரணமாக சிஎஸ்கேவில் இருந்து ஓப்பனர் பேட்ஸ்மேன் வாட்சன் மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய இருவரை நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் சீசன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸை பொறுத்தவரை, இந்த தொடர் சிறப்பான தொடராக அமையவில்லை. ஏனென்றால், இந்த சீசனில் 3 போட்டிகளை விளையாடியுள்ள சென்னை அணி, முதல்போட்டி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. இதையடுத்து டெல்லி, ராஜஸ்தான் மற்றும் நேற்றைய ஆட்டமான ஐதராபாத் அணிக்குஎதிராக நடைபெற்ற 3 போட்டிகளிலுமே சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

டெல்லி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், சென்னை அணியின் ஓப்பர் பேட்ஸ்மேன்கள் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இதையடுத்து,முரளிவிஜயை நீக்கிவிட்டு பிராவோ, அம்பத்தி ராயுடுவை அணியில் இறக்கவேண்டும் என்றும் பேட்டிங் ஆர்டர் மாற்றவேண்டும், டுபிளசிஸ் அல்லது அம்பத்தி ராயுடுவை ஓப்பனர்களாக இறக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முரளி விஜயை நீக்கிவிட்டு நேற்று ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஓப்பனர்களாக வாட்சன்,டுபிளசிஸ் இருவரும் களமிறங்கினர்.

இதேபோல், ருது ராஜ், ஜோஸ் ஹசல்வுட் ஆகியோரும் நீக்கப்பட்டு அவர்களுக்குபதிலாக பிராவோ, ராயுடு, தாகூர், ஆகியோர் அணியில் இடம்பெற்றனர். ஆனாலும் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. இதையடுத்து ரசிகர்களின் விமர்சனங்கள் கேதார் ஜாதவ் மீது பாயத் தொடங்கியது. அவர் ஏன் அணியில் இருக்கிறார். பவுலிங் செய்வதும் இல்லை, பேட்டிங்கும் செய்வதில்லை போன்ற விமர்சனங்கள் எழுந்தன. இதேபோல் வாட்சனுக்கும் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. இனிமேல் கொடுக்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது.. மேலும் அணியில் ஓப்பனிங் சரியில்லாத காரணத்தால் சென்னை அணி தோல்வியடைகிறது.

எனவே ஜாதவ், வாட்சன் இருவரையும் நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் வாட்சனை மாற்றுவதில் தோனிக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், சிஎஸ்கே நிர்வாகம் மொத்தமாக ரெய்னா, ஹர்பஜ் இருவரின் ஒப்பந்தத்தை நீக்கிவிட்டு புதிய ஓப்பனர்கள் எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், 2 பேரை நீக்கிவிட்டால் மாற்று வீரர்களை பெறமுடியும் என்ற விதியின் படி, புதியவீரர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks