truetamilnews.com

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இந்நிலையில் பூந்தமல்லி ஒன்றியம், ஜமீன்கொரட்டூர் ஊராட்சியில் நேற்று காலை 10.50 மணி முதல் 11.20 மணிவரையில் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கந்தபாபு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணை பெரும் தலைவருமான டி.தேசிங்கு, பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான எம்.ஜெயக்குமார் உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் எவ்வித அனுமதியுமின்றி 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளநிலையில் ஒன்றுக்கூடி, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வகையில் கூட்டத்தினை நடத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியும் கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சகாய அல்போன்சா வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெள்ளவேடு போலீசார் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks