truetamilnews.com

சென்னை: ஊருக்கு, ஊர் வலுக்கட்டாயமாக கூட்டம் திரட்டி எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும் போது, கிராமசபை கூட்டம் நடத்தினால் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சொல்வது ஏற்கக்கூடியதாகவா இருக்கிறது என டிடிவி.தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் இதயம் கிராமங்களில் தான் வாழ்கிறது என்று சொன்ன மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி மாநிலம் முழுவதும் நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

கிராமப்புற மக்களின் பிரச்சனைகள், தேவைகளைப்பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பாக உள்ள கிராமசபை கூட்டங்கள் கொரோவை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டிருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயலாகும்.

ஊருக்கு, ஊர் வலுக்கட்டாயமாக கூட்டம் திரட்டி எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும் போது, கிராமசபை கூட்டம் நடத்தினால் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சொல்வது ஏற்கக்கூடியதாகவா இருக்கிறது?. இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks