truetamilnews.com

கடந்த சில நாட்களாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் மறைந்த நடிகர் சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி ஆகியோரிடம் போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் நடிகைகள் மீது மட்டும் எதற்காக இப்படி பாரபட்சமாக விசாரணை நடைபெறுகிறது என்றும், இன்னும் சில முன்னணி நடிகர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது ஆனால் அவர்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை என்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறையினருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து தீபிகா படுகோனே உடன் ஜோடியாக நடித்த மூன்று முன்னணி நாயகர்களுக்கு இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி விரைவில் சம்மன் அனுப்பப்பட இருக்கிறதாம். அர்ஜுன் கபூர், ஷாருக்கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர்தான் அந்த மூவர் என்கிற தகவலும் கசிந்துள்ளது. வரும் நாட்களில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks