மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையின் கேம்ப்ஸ் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பினர் மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


மத்தியில் ஆளும் பாஜகா அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து மாணவர்களின் கல்வியில் காவியை புகுத்தி மாணவர்களின் கனவை கேள்விக்குறி ஆக்கும் வகையில் குலக்கல்வியை புகுத்தும் வகையிலும், வரையறை செய்யப்பட்டு கொண்டு வந்துள்ள இந்த தேசியக்கல்வி கொள்கையை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே போல் இந்த தேசியக் கல்விக் கொள்கை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் இந்த  தேசியக் கல்விக் கொள்கையை மாணவர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்
இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து செல்வதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது எனவும் கூறியுள்ளனர்.

 மேலும் தனிமனித இடைவெளியுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் “தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து கல்வியில் காவியை புகுத்தும் எண்ணத்தை கைவிட வேண்டும் எனவும் இந்த கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்” தெரிவித்துள்ளனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks