truetamilnews.com

புதுடில்லி: யு.பி.எஸ்.சி., தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் வரும் அக்.,4ம் தேதி நடக்க இருந்தது. கொரோனா பாதிப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் யுபிஎஸ்சி தாக்கல் செய்த பதில்மனுவில், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், செய்யப்பட்டுவிட்டது. இதனால், தேர்வை ஒத்திவைக்க முடியாது எனக்கூறியது.

இந்நிலையில், யுபிஎஸ்சி சார்பில் இன்று(செப்., 30) தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு அனுமதி அளித்தததை போல், சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளிவைத்தால், ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் சுழற்சிமுறை பாதிக்கப்படும் எனக்கூறப்பட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks