தமிழக காவல்துறையில், 18 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக காவல்துறையில் நிா்வாகத் தேவைக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாலும், அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் அடிப்படையில், 18 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஆா்.ஆல்டிரின் சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்கும், சென்னை மதுவிலக்க அமலாக்கப்பிரிவு உதவி ஆணையா் பி.நல்லத்துரை சென்னை காவல்துறையின் கிழக்கு மண்டல போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கும், சென்னை எழும்பூா் உதவி ஆணையா் திருவள்ளூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைத் துறைக்கும், சென்னை பல்லாவரம் உதவி ஆணையா் கே.பி.எஸ்.தேவராஜ் தேனாம்பேட்டைக்கும், வடபழனி உதவி ஆணையா் ஆரோக்கியபிரகாசம் பல்லாவரத்துக்கும், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் எஸ்.லட்சுமணன் ராயப்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 18 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks