truetamilnews.com

10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்கள் கேட்டுக்கொள்ளலாம் என்று வெளியிடப்பட்ட அரசாணையை தேதி குறிப்பிடாமல் முதலமைச்சர் நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர்  1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று  தமிழக பள்ளிக் கல்வி துறை கடந்த 24ஆம் தேதி  அரசாணை வெளியிட்டது.  இது குறித்து தொடர்ந்து  குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில், இன்று இது  குறித்து பேசிய முதலமைச்சர் பள்ளிகள் திறப்பு  அரசாணையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். 

மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்பட்ட  ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் குறிப்பிட்டதாவது. 

  • கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தீவிர  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
  • தமிழகத்தில் 7,800கோடி செலவில் கரோனா தடுப்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • கரோனா மையங்களின் வசதிகள் பற்றி மாவட்ட  ஆட்சியர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு,  மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு  பற்றி முடிவெடுக்கப்படும். 
  • 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர்  1 முதல் பள்ளிகள் திறக்கும் என்ற அரசாணை நிறுத்தி  வைக்கப்படுகிறது. 
  • தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 
  • வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு  அதிகரிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

என்று தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks