பிபி, சுகர், ஜாதகம் பார்க்கும் மொபைல் ஆப்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்த்துறை எச்சரித்துள்ளது.ஒவ்வொரு நாளும் பல புதுப்புது செயலிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. லட்சக்கணக்கான செயலிகள் நம்மை விளம்பரங்கள் மூலம் உள்ளே இழுக்கிறது. அவற்றின் ஆபத்தை அறியாமல் பலரும் பதிவிறக்கம் செய்து தங்களில் சுகக் குறிப்புகளை கொடுத்து அந்த ஆப் விவரங்களை சேகரிக்க அனைத்துக்கும் அனுமதி அளிக்கிறார்கள்.

இது நாம் தகவல்களை திருட எளிய வழியாக உள்ளது. இது போன்ற செயலிகளில் ஜாதகம், கைரேகை ஜோசியம், பிபி, சுகர் பரிசோதனை என பல செயலிகள் உங்கள் கட்டைவிரல் மற்றும் கைகளை ஸ்கேன் செய்ய கேட்கிறது. இதிலிருந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்த்துறை எச்சரிக்கிறது.

ஏனெனில் இந்த செயலிகளில் கட்டை விரல் மற்றும் கைகளை ஸ்கேன் செய்வதால் நாம் பயோ மெட்ரிக் முறையில் இணைத்துள்ள ஆதார் மற்றும் வங்கி போன்ற விவரங்களை அவர்கள் எளித்தில் திருட வாய்ப்பு உள்ளது. இது போன்ற விபரீதங்கள் நடைபெறாமல் தடுக்க முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என காவல்த்துறை அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks