truetamilnews.com

தேமுதிக  கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

கடந்த 23 ஆம் தேதி தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் 23 ஆம் தேதி இரவு மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பூரணமாக நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதனால் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், அவர்கள் வருந்தும் படியாக கட்சி பொருளாளரும் விஜயகாந்த் மனைவியும் ஆன பிரேமலதாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks