truetamilnews.com

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தின் ஒலல்கெரே அஜ்ஜிக்காட்டானஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சியாமளா. இந்த தம்பதிக்கு 3 வயதுடைய பூர்விகா என்ற மகள் இருக்கிறார். இந்த குழந்தை கடந்த சில நாட்களாகவே பகல் – இரவாக தூங்காமல் இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளது.

இதனால் பயந்துபோன குழந்தையின் பெற்றோர் அங்குள்ள பகுதியில் இருக்கும் சவுடம்மன் கோவிலுக்கு அழைத்து சென்ற நிலையில், அக்கோவிலின் பூசாரியாக ராகேஷ் என்ற 19 வயது இளைஞர் இருந்துள்ளார். இவரிடம் குழந்தையை காண்பித்து விபரத்தை தெரிவித்துள்ள நிலையில், குழந்தைக்கு பேய் பிடித்து இருக்கிறது என்றும், இதனை பூஜை செய்து சரியாகிவிடலாம் என்றும், பூஜைக்கு பின்னர் குழந்தை நன்றாக சாப்பிடும் என்றும், தூங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த விஷயத்திற்கு குழந்தையின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், குழந்தைக்கு பேயை விரட்டுவதாக கூறிவிட்டு ராகேஷின் இல்லத்தில் அடைத்து வைத்து சிறப்பு பூஜை என்று பிரம்பால் அடித்துள்ளார். இதனால் சிறுமி மயங்கி விழுந்த நிலையில், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தப்பி சென்றுள்ளான்.

குழந்தை மயங்கி விழுந்ததை அடுத்து, அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே, சிறுமி பரிதாபமாக உயிரிழந்த விஷயம் தெரியவந்துள்ளத்து. குழந்தையின் உடலை கண்டு பெற்றோர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவே, குழந்தை பிரம்பால் அடித்ததால் வலி தாங்க இயலாமல் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ராகேஷை கைது செய்த காவல் துறையினர், கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks