truetamilnews.com

தேவையான பொருட்கள் 

துளசி இலை – அரை கப்
வெற்றிலை – 4
கற்பூரவல்லி இலை – 2
புதினா இலை – கால் கப்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன் 
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு பல் – 2
சர்க்கரை – அரை டீஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை

ஒரு கடாயில் நெய் விட்டு பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்
எல்லா இலைகளையும் நன்றாக கழுவி இதனுடன் சேர்த்து வதக்கவும்

இதில் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை மிதமான அளவில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும் பிறகு அடுப்பை நிறுத்தி  இலைகளை தனியாக எடுத்து மையாக அரைத்து வேகவைத்த நீரில் சேர்த்து ஒரே ஒரு கொதி விட்டு இறக்கவும்

பரிமாறும் போது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks