truetamilnews.com

தேவையான பொருட்கள் 

இஞ்சி சாறு – கால் கப்

தக்காளிக்காய் – 2

பச்சை மிளகாய் – 1

சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

பச்சை பட்டாணி – அரை கப்

வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் 

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

சூப் ஸ்டாக் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

ஸ்டாக் செய்முறை

ஸ்டாக் செய்ய தேவையான பொருட்கள்

வெங்காயம் – ஒன்று

உருளைக்கிழங்கு – ஒன்று

ஓமம் – ஒரு டீஸ்பூன் 

செய்முறை

ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி போட்டுக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். ஓமம் சேர்த்து காய்கறி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்த பின்னர் கீழே இறக்கி வடிகட்டி கொள்ளவும். இந்த நீர் ஸ்டாக் ஆகும்… இதனை சூப் செய்ய பயன்படுத்த வேண்டும் 

சூப் செய்யும் முறை

சிறிய குக்கரில் வெண்ணெய் விட்டு பச்சை பட்டாணி கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தேவையான அளவு சூப் ஸ்டாக் சேர்த்துக் கொள்ளவும். கொதித்த பின்னர் சீரகத்தூள், உப்பு சேர்த்து இஞ்சி சாறு ஊற்றி கிளறி இறக்கவும். கொத்துமல்லி தழையை அதில் தூவி விட்டு சூடாக பறிமாறவும்

குறிப்பு: ஸ்டாக் செய்ய பயன்படுத்திய காய்கறிகளை வீணாக்காமல் சமையலுக்கு பயன்படுத்தலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks