truetamilnews.com

சென்னை: பருவமழை காலகட்டங்களில் ஆண்டுக்கு பல நூறு டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இவ்வாறு வீணாகும் தண்ணீரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிதாக கோட்டங்கள் உருவாக்கம் செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இதற்காக 2014ல் கரூர் மாவட்டம் மாயனூர் கிராமம் அருகே கதவணை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வழியாக தான் காவிரியில் இருந்து தெற்கு வெள்ளாறுக்கு நீர் திருப்பி விடப்படுகிறது.அடுத்த கட்டமாக கட்டளை கதவணையில் இருந்து வெள்ளாறு வரை கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக, 572 ஹெக்டேர் பட்டா நிலம் மற்றும் 83.80 ஹெக்டேர் புறம்போக்கும் கையகப்படுத்தப்படுகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள வசதியாக கரூர் மாவட்டம் குளித்தலையை மையமாக கொண்டு கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் 4 சிறப்பு திட்ட உபவடிநில கோட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்காக, கொசஸ்தலையாறு உபவடிநிலத்தின் கீழ் செயல்பட்ட தேர்வாய்கண்டிகையில் செயல்பட்டு வந்த சிறப்பு திட்ட கோட்டங்கள் குளித்தலை சிறப்பு திட்ட கோட்டத்துக்கு மாற்றப்படுகிறது. அதன்படி செயற்பொறியாளர் தலைமையில் குளித்தலைமையகமாக கொண்டு 2 உபவடிநில கோட்டங்கள், மாயனூர், விராலிமலை தலா 1 உபவடிநில கோட்டங்கள் செயல்படுகிறது. இந்த கோட்டங்கள் திருச்சி தலைமை பொறியாளரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks