truetamilnews.com

பாடகர் எஸ்பிபியின் எஸ்பிபி இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் காருக்கு திரும்பிய விஜய், பாதையில் கிடந்த ரசிகரின் ஒற்றை காலணியை எடுத்துக்கொடுத்தது, இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விஜய் நேரில் வந்தது பற்றி சினிமா துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது என இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் இது பற்றி ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் கூறியதாவது: ‘கொரோனா காரணமாக பிரபலங்கள் யாரும் வர வேண்டாம் என அரசு கூறியிருக்கிறதோ என தற்போது வரை நினைத்தேன். ஆனால் விஜய் சாரை பார்த்த உடன் தான் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என எனக்கு தெரிகிறது.

தளபதி மீது அதிக மரியாதை இருக்கிறது’ என கூறி இருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளதாவது: ‘தளபதி…. தளபதி தான். விஜய் அண்ணா ஒரு சிறந்த மனிதன்’ என குறிப்பிட்டு, நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks