truetamilnews.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட அரசியல் கட்சிகள் தங்களுடைய பணிகளை எப்பொழுதும் தீவிரமாக செய்து வருகின்றது. நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவரும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சுறுசுறுப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

பல்வேறு யுக்திகளை கையாண்டு தொகுதிகளை தக்கவைத்துக்கொள்ள தீயாக உழைத்து வருகின்றனர். அதுபோல பல்வேறு துறையில் பிரபலமாக இருப்பவர்களும் திரைப்பட நடிகர், நடிகைகளும் தங்களை கட்சிக்குள் இணைத்துக்கொள்ள முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் திமுகவின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தொகுதியின் எம்எல்ஏ ஆகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து கொண்டு இருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விமலுக்கு குழந்தை பிறந்த பொழுது அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய வீட்டிற்கு சென்று குழந்தையை வாங்கி வாழ்த்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரு நடிகர்களும் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுகவில் இணையப் போகிறார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. இது போன்ற பிரபலங்களின் பிரச்சாரம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு உறுதுணையாக இருக்கும் என்று திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks