truetamilnews.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஒகளூர் கிராமத்தில் 2013ம் ஆண்டு சிறு, குறு மேம்பாட்டுக்காக 70 பயனாளிகளுக்கு கறவை மாடு வாங்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தலா 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. அதன்படி 36 ஆயிரம் ரூபாய் வரை வட்டியுடன் விவசாயிகள் தங்களது கடனை திருப்பி செலுத்துவிட்டனர். இந்தநிலையில் 2016ம் ஆண்டு இந்த கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த கோரி ஓகளூர் கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து விவசாயிகளுக்கு நோட்டீஸ் வந்துள்ளது.இதையடுத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற விவசாயிகள், கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான தங்களது சான்றிதழை காண்பித்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். எனினும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பதிலளித்த வங்கி நிர்வாகம், அப்போதைய வங்கி செயலாளர் உயரதிகாரிகளின் ஆலோசனையை பெறாமல் அனைவருக்கும் மானியம் உண்டு என்று நினைத்து கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக கூறி உள்ளது. எனினும் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட கடனை வங்கி நிர்வாகம் எப்படி மீண்டும் வசூலிக்க முடியும் எனவும் இது தொடர்பான விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks