truetamilnews.com

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மின்சார வாகனங்களின் உற்பத்தியை பெருக்க மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். ஏற்கனவே உள்ள கொரோனா ஊராடங்கால் ஏற்ப்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும் சரி செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் மத்திய அரசு மின்சார வாகன உற்பத்தி மீது தற்போது கவனம் செலுத்தி வருகிறது. வருகிற ஆண்டுகளில் 5 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 55 ஆயிரம் மின்சார நான்கு சக்கர கார்கள், 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள், 7000 மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்ய மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதில் தமிழக அரசும் எலக்டிரிக் வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இதனால் பேம் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழ்நாடு, கேரளா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 241 சாலையோர மின்சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks