truetamilnews.com

புதுடில்லி: ஐ.நா., பொது சபையில் இன்று(செப்.,26) நடைபெறும் கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.ஐ.நா., பொதுசபையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற உள்ளது. அதாவது உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையை முன்கூட்டியே விடியோவில் பதிவிட்டு அனுப்பி, அதனை கூட்டத்தின் போது ஒளிபரப்பும் வகையில் நடத்தப்பட உள்ளது.பொதுக் கூட்டத்தின் நிகழ்ச்சிப்படி, இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற உள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பொது விவாதம் இறுதி செய்யப்படும் என்றும், கடந்த செப். 22-ம் தேதி தொடங்கிய பொது விவாதம் செப்.29 வரை நடைபெறும். பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் பேசும் முதல் உலகத் தலைவராக நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

To Get More News Instantly Join Telegram truetamilnews.com or truetamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks