truetamilnews.com

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில், மும்பை அணியை5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன்பிறகு தனது 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி மந்தமான பேட்டிங் செய்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங், சென்னை அணியில் ரெய்னா, ராயுடு போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், இருப்பவர்களை சரியாக பயன்படுத்த சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

To Get More News Instantly Join Telegram truetamilnews.com or truetamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks