truetamilnews.com

தற்போது திரைத்துறையில் நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தும் விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் ஆகியோர் போதைபொருள் விவகாரத்தில் சிக்கி இருக்கின்றனர். இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

அதில் போதை பொருட்களை நடிகைகள் மட்டும் தான் பயன்படுத்துகின்றனர் என்ற வகையில் பேசப்படுகிறது. ஆண்கள் பயன்படுத்துவது குறித்து பேசப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.

நடிகர்களை இந்த விசாரணைக்கு ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள குஷ்பூ நடிகர்கள் போதை பொருள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நடிகைகள் மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாதா என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருக்கின்றார். குஷ்பூவின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks