truetamilnews.com

படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி; செம கடுப்பில் ரசிகர்கள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி; செம கடுப்பில் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா 64 ரன்களும், ஷிகர் தவான் 35 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பின்வரிசையில் வந்த ஸ்ரேயஸ் ஐயர் 26 ரன்களும், ரிஷப் பண்ட் 37* ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி அணி 175 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு சேன் வாட்சன் 14 ரன்களிலும், முரளி விஜய் 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்து மிக மோசமான துவக்கம் கொடுத்தனர்.

படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி; செம கடுப்பில் ரசிகர்கள் !! 3

பின்வரிசையில் வந்த வீரர்களும் போட்டியின் இறுதி வரை ஆமை வேகத்திலே ரன் சேர்த்ததால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் சேர்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இன்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இதன் மூலம் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks