Truetamilnews.com

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தொற்று இல்லை, நலமுடன் இருக்கிறார் என தலைமை கூறிவந்த நிலையில் அதை திட்டவட்டமாக மியாட் மருத்துவமனை மறுத்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியானது. இதனால், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Image

இதையடுத்து தேமுதிக தலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்லது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Image

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேமுதிக  தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks