truetamilnews.com

சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று ரயில்வே டிஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார்.

கொரோனா கால ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் சென்னையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

தொடக்கத்தில் 2200 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக தற்போது 2500 பேருந்துகள் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்பட்டாழும் மக்கள் பெரிதும் பயன்படும் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட வில்லை. எப்போது முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகரில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று ரயில்வே டிஐஜி அருள்ஜோதி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ரயில் சேவை தொடங்கும் போது பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks