truetamilnews.com

தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சியும் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்டம், வட்டம், ஒன்றிய அளவில் கட்சி நிர்வாகிகளையும் மாற்றம் செய்து வருகின்றனர்.

திமுகவை எப்படியாவது ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதன்படி, திமுகவில் “எல்லாரும் நம்முடன்” என்கின்ற திட்டத்தை தற்போது செயல்பட்டு வருகின்றன.

அதில், இணையதளம் வாயிலாக ( ஆன்லைன்) உறுப்பினர் சேர்க்கையை கடந்த 15ம் தேதி முப்பெரும் விழா அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலத்தில் தொடங்கி வைத்தார்.

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் திமுகவில் சேர்ந்து வருவதாக திமுக தலைவர்கள் அள்ளி விடுகின்றனர். குறிப்பாக துவங்கிய எட்டு நாட்களிலேயே 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இதன் மூலம் சேர்ந்ததாக திமுக தலைமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் எந்தவித ஆவணமும் இன்றி, உறுப்பினர் சேர்க்கை சாத்தியம் என்பது தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கைக்காக, விண்ணப்பிப்வர்களின் செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.,யை பதிவு செய்து உறுப்பினர் அட்டையை பெற முடிகிறது. அதிலும் பெயர், புகைப்படம், மெயில் முகவரி உள்ளிட்ட பல விபரங்களை மாற்றிக் கொடுத்தாலும் உறுப்பினர் அட்டை பெற முடிகிறது என்பது திமுகவிற்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் உயிரோடு இல்லாதவர்களுக்கும், மாற்று கட்சி முக்கிய பிரமுகர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் அவர்களுக்கு தெரியாமலே, திமுகவில் உறுப்பினர் அட்டையை பெற முடியும்.இந்த குளறுபடிகள் அனைத்தும் இப்போது சமூக வலைதளங்களில் பரவும் உறுப்பினர் அட்டைகளின் மூலமாக தெரியவந்துள்ளது.

அதாவது முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருக்கு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் நகைச்சுவையாக மாறியுள்ளது.

இந்த அடையாள அட்டை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks