truetamilnews.com

கொரோனா ஊரடங்கின் காரணமாக, வருவாய் குறைந்து வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறுகடனுதவி பெற்று தொழில் செய்யக்கூடியவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வீட்டுக் கடன் பெற்றவர்கள் மாத தவணை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வங்கிகள், கடன் தவணையை செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கியது. ஆறு மாதத்திற்கு கடன் தவணை செலுத்த தேவையில்லை என்றாலும், தற்போது மறுசீரமைப்பு திட்டத்தின்படி வட்டியுடன் சேர்த்து கடன் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, கடன் தவணை செலுத்துவதை இரண்டு ஆண்டுகள் வரை தள்ளி வைக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இதற்கான வழிகாட்டுதல்களையும் தனது இணையதளத்தில் எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து கடன்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்பாக கடன் பெற்றவர்கள் இந்த கடன் சலுகையை கோர தகுதி பெற்றவர்கள். குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை, இவர்கள் கடன் தவணைகளை தாமதம் இன்றி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால், ஏற்பட்ட வருவாய் இழப்புக்கான ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks