truetamilnews.com

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாக அதிமுக., திமுக இருந்து வருகின்றன. தேர்தல் சமயங்களில் இவர்கள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள். மத்தியிலும், வட மாநிலங்களிலும் பெரிதாகப் பேசப்படும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி சேரத்தான் முயற்சி செய்வார்கள். அந்த அளவிற்கு அதிமுகவும், திமுகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சிகளாகத் திகழ்கின்றன..
தமிழகத் தேர்தலைப் பொறுத்தவரை அவ்வப்போது மூன்றாவது கூட்டணி அமையும். இந்த மூன்றாவது அணி பற்றி பரபரப்பாக பேசப்படும். ஆனால் தேர்தல் முடிவுகள் இந்த மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தந்ததில்லை


கடந்த 2016 தேர்தலில் அதிமுக கூட்டணியில், மனிதநேய ஜனநாயக கட்சி,தமிழ் மாநில முஸ்லிம் லீக்,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,இந்திய குடியரசு கட்சி,கொங்கு பேரவை கட்சி,சமத்துவ மக்கள் கட்சி,சமத்துவ மக்கள் கழகம், முக்குலத்தோர் புலிப்படை போன்ற கட்சிகள் இடம் பெற்றன.அனைத்துக் கட்சிகளும் ஒரே சின்னமாக, இரட்டைஇலையில் போட்டியிட்டன.

திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மனிதநேய மக்கள் கட்சி,புதிய தமிழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி,சமூக சமத்துவப் படை,மக்கள் தேமுதிக போன்ற கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் இணைந்து போட்டியிட்டன.

இது தவிர மூன்றாவது அணியும் ஒன்று உருவானது ‘மக்கள் நலக் கூட்டணி’ என அறிவிக்கப்பட்டு தேமுதிக ,தமாகா ,இந்தியகம்யூனிஸ்டு,இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை ஒன்றிணந்து போட்டியிட்டன.
இதே போல் பாஜகவுடன் இந்திய ஜனநாயக கட்சி,இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவை இணைந்தும் பாமக ,நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தனித்தும் போட்டியிட்டன.
இதில் அதிமுக 227 இடங்களிலும்,திமுக174 இடங்களிலும் போட்டியிட்டன.தேர்தல் முடிவில் அ.தி.மு.க. 134 இடங்களிலும்,திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் வழக்கம் போல இந்த முறையும் அதிமுக., திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் கூட்டணிக்கு தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இன்னும் கூட்டணி குறித்து பேசவில்லை.சசிகலாவின் வருகை, என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய ஆலோசனகள்தான் நடை பெற்று வருகின்றன.. எனினும் ஒன்று பட்ட அதிமுகவை உருவாக்கவேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக இருக்கிறது.டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவுடன் இணைவதில் ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை எனத் தெரிகிறது. இது தவிர கடந்த முறை அமைந்த கூட்டணியே அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பா.ம.க அல்லது தே.தி.மு.க.வை இணைக்கலாம் என்ற ஆலோசனயும் இருக்கிறது.

எதுவாக இருந்தாலும் சசிகலா வருகைக்கு பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
திமுகவை பொறுத்தவரை கடந்த தேர்தல் போலவே கூட்டணி என்றாலும் மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டிருக்கிறது. புதிய தமிழகத்திற்கு வாய்ப்பில்லை என்பது போல் பேசப்படுகிறது. “எங்கள் கட்சித் தொண்டர்கள் தனித்து போட்டியிடுவதையே விரும்புகிறார்கள்” என்று பேசிக் கொண்டாலும் தேமுதிக சார்பில் திமுகவுடன் கூட்டணிக்கு திரை மறைவில் பேசப்பட்டு அது தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது..இதே வேளையில் தனித்து போட்டியிடப் போவதாகச் சொல்லப்படும் பா.ம.க கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையுமா? என எதிர்பார்ப்பதாக தெரிகிறது.சீமானின் .’நாம் தமிழர்’ கட்சியினர், தனித்து போட்டிடுவது எனத் தீர்க்கமாக முடிவாகி பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களைக் கூட முடிவு செய்து விட்டனர்.

இந்த நிலையில் மூன்றாவது கூட்டணி அமைக்கும் முயற்சி ஒன்று திரை மறைவில் மிக ஜரூராக நடைபெற்று வருகிறது. சமீப காலமாக அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே பிணக்குகள் தொடர்ந்து வருகின்றன.தேர்தல் சமயத்தில் இது உச்சத்திற்கு போகலாம் என பாஜக தலைமையிடம் கருதுகிறது.மேலும் சசிகலாவின் வருகைக்குப் பின்னர் அ.தி.மு.க இரண்டாக செயல் பட்டால் வெற்றி வாய்ப்பு எப்படிருக்கும் என்பதிலும் சந்தேகப்படுகிறார்கள். எனவே இந்த சமயத்தில் மூன்றாவது கூட்டணி அமைந்தால் வெற்றிக்கு வாய்ப்பிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். இதற்காக அவர்கள் முதல் கட்டமாக ரஜினியை குறி வைத்துள்ளனர்.
ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களம் காணலாம் என பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல் “ரஜினியுடன் கூட்டுச் சேரத் தயார்” என ஏற்கெனவே மக்கள் நீதி மையத் தலைவரான கமலஹாசன் அறிவித்திருந்ததால் அவரையும் பா.ம.க.,தே.மு.தி.க.,புதிய தமிழகம் போன்ற கட்சிகளையும் மேலும் தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லாத கட்சிகளையும் ஒன்றாக இணத்து போட்டியிடலாம் என திரைமறைவுத் திட்டங்கள் தீட்டப்பட்டு இது பற்றி 

ரஜினியிடமும் பேசியிருக்கிறார்கள். இதற்கு அவர் பதில் சொல்லாவிட்டாலும், இது பற்றி சில அரசியல் ஆலோசகர்களுடன் அவர் பேசி வருவதாகச் சொல்கிறார்கள். பாஜக மேலிடமோ ஒரு வேளை அவர் இதற்கு முன் வராவிட்டால் மூன்றாவது அணிக்கு:”வாய்ஸ்” கொடுத்தாலே போதும் என்ற முடிவிலும் இருக்கிறார்களாம். இதுவல்லாமல் தேமுதிகவினர் மூன்றாவது அணியைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம்.

இது தவிர சசிகலாவின் வருகைக்கு பின்னர் நிச்சயமாக அவர் அ.தி.மு.க.வினருக்கு அழைப்பு விடுப்பார். பல முக்கிய பிரபலங்களை திரை மறைவில் விலைக்கு வாங்குவார்..எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வினர் இதற்கு உடன்படாவிட்டால் அதிமுக இரண்டாக உடையும்.அப்பொழுதும் சசிகலா தலைமையில் வேறோரு கூட்டணி அமையும் எனவும். எது எப்படி இருந்தாலும் மூன்றாவது அணி அமைவது உறுதி எனத் தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks