truetamilnews.com

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆக்ஸிஜன் தடைபட்டு கொரோனா நோயாளிகள் இருவர் உயிரிழந்தனர்.


திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நெகட்டிவ் என முடிவு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.  மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் அனைவருக்கும் ஆக்ஸிஜன் தடைப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதில் இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. 


இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் இருவர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆக்ஸிஜன் தடைபட்டு உயிரிழந்தனர் .  ஆனால் மருத்துவமனையில் பக்கத்து கட்டிடத்தில் வேலை நடைபெறுகிறது.  அங்கு வேலைக்கு வந்த நபர்கள் அதற்கு வரக்கூடிய ஒயரினை துண்டித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks