கோவை மாவட்டம் அரசு மருத்துவமனையில் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிலையம் தொடங்கி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகமாக நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். விபத்துகளில் சிக்கும், சர்க்கரை நோய் போன்றவற்றால் கால்களை இழக்கும் நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். செயற்கை கால் தேவைப்பட்டால் சென்னைக்கு தான் செல்ல வேண்டும்.இதனால் மாதந்தோரும் சுமார் பத்து நோயாளிகள் சென்னைக்கு செல்கின்றனர்.அப்போது 15 நாள்கள் அங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.இந்த பிரச்சனைக்கு திர்வு காணும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ50 இலட்சம் செலவில் இந்த நிலையத்தை தொடங்கி உள்ளனர்.

விபத்து சிகிச்சைத்துறைத் தலைவர் வெற்றிவேல் செழியன் “தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.  ஒருவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.  செயற்கை கால் தேவைப்படுவோர் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் ரேசன் கார்டு ஆதார் அட்டை காப்பீட்டு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் இது முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் செய்து கொள்ளலாம் என கூறி உள்ளார். இதற்காக பத்து படுக்கைகள் கொண்ட வார்டு உள்ளது. செயற்கை கால் எடை குறைவாக இருப்பதால் நடப்பதற்கு எளிதாக இருக்கும்.” என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks