truetamilnews.com

இன்றைய போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 13-வது சீசனில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. இந்த சீசனின் 4-வது போட்டியில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் இதுவரை எத்தனை போட்டிகளில் மோதியுள்ளன என்றும், அதிக வெற்றிகளை குவித்த அணி எது என்றும் தற்போது பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 14 போட்டிகளில் சென்னை அணியும், 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற 2 போட்டிகளிலும்  சென்னை அணி தான் வெற்றி பெற்றுள்ளது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் – சென்னை பலப்பரீட்சை நடத்தியது. முதலில் ஆடிய சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி இலக்கை எட்டி கோப்பையை வென்றது. இதுவரை சிஎஸ்கே 3 முறையும், ராஜஸ்தான் 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 2008-ம் ஆண்டு சென்னை அணி, ராஜஸ்தான் அணியுடன் மோதிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

இந்த முறை ராஜஸ்தான் அணியில் ராபின் உத்தப்பா புதிதாக இணைந்துள்ளார். இதுவரை இவர் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிகளில் 538 ரன்கள் அடித்துள்ளார். சென்னை அணி வீரர்களான ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லா ராஜஸ்தான் அணிக்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். இன்றைய போட்டியில் இரண்டாவது வெற்றிக்காக சென்னை அணியும், முதல் வெற்றிக்காக ராஜஸ்தான் அணியும் மோத உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks