truetamilnews.com

அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன. அதேபோல் தேர்தல் ஆணையமும் தனது முதல்கட்ட பணியை தொடங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செப்டம்பர் 20ஆம் தேதி வரை 5,51,408 பேர் புதிதாக விண்ணபித்துள்ளதாக தெரிவித்தார்.

இதில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 1,66,408 பேரும், பெயர் நீக்குவதற்கு 2,37,248 பேரும் விண்ணபித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் 56,000 இரட்டை பதிவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இரட்டை பதிவுகளை தற்போது கணினி மூலமாகவும் சரிபார்க்கும் பணிகள் மாவட்டவாரியாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்தபடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் எனக் கூறினார்.

இதனிடையே கொரோனா பாதிப்பால் அந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதை தள்ளிபோட தமிழக தலைமைச்செயலாளர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks