கோவை மாவட்டம் சூலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன்  டி.எஸ்.பி ஆலோசனை.

நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்த நிலையில் தடையை மீறி சிலை வைக்கப்படும் என இந்து அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் போலிசார் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்பற்றி டி.எஸ்.பி சூரியமூர்த்தி “பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்யவோ கூட்டங்களை கூட்டி ஊர்வலம் சென்று சிலைகளை கரைக்கவோ அனுமதி இல்லை என்று கூறினார்.

மாநிலத் தலைவர் காளேஸ்வரன் சுப்பிரமணியன் முதல் அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.  அதன் பின்பு எங்கள் முடிவை சொல்வோம் என்று இந்து முன்னணி அமைப்பினர் கூறியுள்ளனர். மேலும் இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் ராஜ் குமார், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷித் தலைவர் விஜய குமார், இ.ம.க நிர்வாகி மாணிக்கம் ஆகியோர் கலந்து பேசவுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks