truetamilnews.com

துபாய் நாட்டில் நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது

டெல்லி பேட்டிங்

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ப்ரித்திவி ஷா களம் இறங்கினர். தவான் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். சிறிது நேரத்தில்  பஞ்சாப் அணியின் வீரர் முகம்மது சமி வீசிய பந்தில் ப்ரித்திவி ஷா கேட்ச் அவுட் ஆனார். 


பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் 

அதன் பிறகு களம் இறங்கிய ஹிட்மயர் 7 ரன்களில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ரிஷப் பண்ட் ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து ரன் சேர்ப்பில் இறங்கினர். ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களிலும் பண்ட் 31 ரன்களிலும் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய  ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னஸ் அதிரடியாக விளையாடினார். 

ஆட்டத்தின் கடைசி ஒவர்

ஸ்டோய்னஸ் ஆட்டத்தின் இறுதி ஒவரில் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை விளாசி  தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் வெறும் 21 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்து 53 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 
இதனால் பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்கு 158 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

 பஞ்சாப் அணியின் பவுலிங் 

பஞ்சாப் அணியின் தரப்பில் முகம்மது சமி 15 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்
முதல் முறையாக ஐ.பி.எல் போட்டியில் களம் கண்ட மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் எஸ். கோட்ரெல் 24 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் புதிதாக களம் இறங்கிய இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னோயி ஒரு விக்கெட் எடுத்தார்

IPL 2020: In Pics, Delhi Capitals vs Kings XI Punjab, Match 2 in Dubai


பஞ்சாப் பேட்டிங்

பிறகு பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கே. எல் ராகுல் மற்றும் மயங்  அகர்வால் களம் இறங்கினர்

கே.எல் ராகுல் ஆட்டம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி 20 ரன்களில் மொகித் சர்மா வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேரினார்

IPL 2020: It is bittersweet, says KL Rahul after Kings XI Punjab lose in  Super Over vs Delhi Capitals - Sports News

தமிழக வீரர் அஸ்வின் பங்கு

இந்த முறை டெல்லி அணியால் வாங்கப்பட்ட தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. காயம் காரணமாக தமிழக வீரர் அஸவின் மீதம் உள்ள மூன்று ஓவர்களை வீச வரவில்லை. 

மயங் அகர்வாலின் அதிரடி

அதன் பிறகு இறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.  மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆடி தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அணியை வெற்றியின் அருகில் இழுத்து சென்றார். 

பரபரப்பான கடைசி ஓவர்

பரபரப்பான கடைசி ஓவரை வீசுவதற்கு ஸ்டோய்னஸ் வந்தார். கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஓவரின் முதல் பந்தில் மயங்க அகர்வால் சிக்ஸர் அடித்தார்.பிறகு இரண்டாவது பந்தில் இரண்டு ரன்களும் மூன்றாவது பந்தில் பவுண்டரியும் அடிக்க ஸக்கோர் சமன் ஆனது. பிறகு நான்காவது பந்தை டாட் செய்தார் மயங்க் அகர்வால். 2 பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் 5வது பந்தில் தனது ஆட்டத்தை இழந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். மயங்க் அகர்வால் 4 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளை அடித்து 60 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். 

சூப்பர் ஓவர் 

பின்னர் ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் அதையும் விக்கெட் ஆக மாற்றி ஆட்டத்தை  சூப்பர் ஓவருக்கு மாற்றினார் ஸ்டோய்னஸ் 


டெல்லி அணி பவுலிங் 

டெல்லி அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசி ரபாடா, ரவி அஷ்வின் ஸ்டோய்னஸ் தலா இரண்டு விக்கெட்டுகளும் மொகித் சர்மா அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்


பஞ்சாப் அணியின் சூப்பர் ஓவர் 

பஞ்சாப் அணியின் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆட கே. எல் இராகுல் மற்றும் பூரன் இருவரும் வந்தனர். டெல்லி அணிக்காக ரபாடா சூப்பர் ஓவரை வீச வந்தார். கே. எல் ராகுல் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க பூரன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பஞ்சாப் அணி இரண்டு ரன்கள் மட்டும் எடுத்தது இதனால் டெல்லி அணிக்கு மூன்று ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


டெல்லி அணி வெற்றி 

டெல்லி அணிக்காக கேப்டன் ஸ்ரேயஸ் அய்யருடன் சேர்ந்து ரிஷப் பண்ட் விளையாட வந்தார். பஞ்சாப் அணிக்கு சூப்பர் ஒவரை வீச முகம்மது சமி வந்தார். முதல் பந்து டாட் பந்தாக அமைய இரண்டாவது பந்தில் வைடு(Wide) மூலம் ஒரு ரன் வழங்கினார் சமி. பின்னர் வீசப்பட்ட பந்தை தட்டிவிட்ட ரிஷப் பண்ட் இரண்டு ரன்கள் ஓடி எடுத்தார். இதனால் டெல்லி அணி சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பெற்று நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks