truetamilnews.com

இந்தியாவில் 3 கரோனா தடுப்பு மருந்துகளின் சோதனை இறுதிகட்டத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அவர் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் மருந்து உற்பத்தி மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள் ளன. இதன்படி, மொத்தம் 30 மருந்துகள் விலங்கு களிடம் பரிசோதனை மற்றும் மனிதர்களிடம் பரிசோதனை என பல்வேறு கட்டங்களில் உள்ளன. 

இவற்றில் 3 மருந்துகள் மனிதர்களிடம் முதல், 2-ம் மற்றும் 3-ம் கட்ட பரிசோதனை என இறுதி கட்டத்தில் உள்ளன.

மேலும் 4 மருந்துகள் மனிதர்களுக்கு வழங்கி பரிசோதனை செய்வதற்கு முந்தைய (பிரீ கிளினிகல்) நிலை யில் உள்ளன.

தடுப்பு மருந்து சந்தைக்கு வந் ததும் உற்பத்திக்கேற்ப நாடு முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விவகாரங்களை உயர்நிலை நிபுணர் குழு கவனிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks