truetamilnews

ஐ பி எல் தொடரின் முதல் போட்டியில் செப்டம்பர் 19 ம் தேதி இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. காரணம் இந்த வருட IPL தொடர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்றதாலும், மேலும் முக்கியமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி தன்னுடைய ஒய்வு அறிவிப்பை வெளியிட்டதாலும்.

சென்னை அணி டாஸில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆட்டத்தை துவங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

Saurabh Tiwary led MI's counter-attack, going after Ravindra Jadeja with great effect.

சிஎஸ்கே அணி 5வது ஓவர் முதல் விக்கெட் வேட்டையைத் துவங்கியது. தீபக் சாஹர் 2, சாம் கர்ரன் 1, லுங்கி நிகிடி 3, பியுஷ் சாவ்லா 1, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர். சிஎஸ்கே அணி 9 விக்கெட்களை வீழ்த்தியது.

163 என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னையில் முரளி விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரணிலும் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டூப்ளஸி மற்றும் ரைடூ இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். டூப்ளஸி ஆட்டமிழக்காமல் 58 ரன்னும், அதிரடியாக ஆடிய ரைடூ 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஜடேஜா 10 ரன்னிலும், குரன் 18 ரணிலும் ஆட்டமிழந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் களமிறங்கிய தோனி ஆட்டத்தை தனது பாணியில் முடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அட்டமிழக்காமல் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.

ஆரம்பம் அதிரடி

கடைசியில் டூப்ளஸி 2 பவுண்டரிகள் விளாசி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

சென்றமுறை இறுதி ஆட்டத்திற்கு மும்பை அணியை பழி தீர்த்தது சென்னை அணி என்று சென்னை அணி ரசிகர்கள் மகிழிச்சி கடலில் திகைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks