truetamilnews.com

இடம்: கலைமகள் தெரு, அய்யர் பங்களா, மதுரை.

👑 தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பின் – முப்பெரும் விழா 👑

🍀தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பின்” – சார்பாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் சிறப்பான திட்டங்களை கொண்டு “முப்பெரும் விழா” நடைபெற்றது …🍀

மதுரை மாவட்டம், ஐயர்பங்களா, கலைமகள் தெருவில் உள்ள தனியார் அரங்கில் “தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பின்” சார்பாக “முப்பெரும் விழா”

மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் K.சுனாமி செந்தில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ..‌.

விழாவிற்கு மதுரை மாவட்ட தலைவர். I. வீரராஜா வரவேற்புரை வழங்கினார் .‌…

💥விழாவின் நிகழ்வாக தவழும் நிலையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் வாய்ப்பு பெற்று “மாற்றுத்திறனாளிகள் தொழில் கூடம்” திறந்து வைக்கப்பட்டது ,💥

💥மதுரை மாவட்ட நிர்வாகிகள், மாநகர, நகர நிர்வாகிகள் பதவியேற்பு விழா,💥

💥மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, 💥

💥மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு தொடந்து உறுதுணையாக இருந்த சாதனையாளர்களுக்கு “உதவிக்கரம் விருது” கொடுத்து கவுரவிக்கப்பட்டது …💥

முப்பெரும் விழாவிற்கு மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். K. சுனாமி செந்தில் தலைமை ஏற்றார்.

விழாவின் சிறப்பு அழைப்பாளராக கூட்டமைப்பின் மாநில தலைவர் .
வழக்கறிஞர்.
திண்டுக்கல்.
M. முகமது அனஸ் கலந்து கொண்டு நலத்திட்டங்கள், விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் …

மேலும் விழாவிற்கு
மாநில செயலாளர்.
சோலார்.K S. செந்தில் குமார்,

மாநில துணை செயலாளர்.
J. தர்மராஜ் ,

மாநில செயற்குழு உறுப்பினர். திருமதி. நூரி சல்மா,

சிவகங்கை. மாவட்ட தலைவர். பேராசிரியர். சந்திர சேகர்

ஆகியோர் கூட்டமைப்பின் மாநில தலைமை சார்பாக கலந்து கொண்டனர் …..

சிறப்பு விருந்தினராகளாக .‌..

மதுரை மருத்துவக் கல்லூரி தலைமை டாக்டர். J.R. விஜயலட்சுமி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தொழில் கூடத்தை திறந்து வைத்தார் ,

உலக சித்தர்கள் ஞானபீடம் தலைவர். தவத்திரு. இரத்னமாணிக்கம்,

மதுரை உதவும் உறவுகள் நிறுவனர். வழக்கறிஞர். முகமது ஜமால்,

J.A.M. அரபிக் கல்லூரி – மதுரை- நிறுவனர். S.M. அல்தாப் அலி ,

மதுரை. வழக்கறிஞர். பாண்டிய ராஜன்,

ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் …

தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பின் மாநில தலைவர். வழக்கறிஞர். திண்டுக்கல். M. முகமது அனஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது … கொரோனா கால கட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது … ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், வசதி படைத்தவர்களும் எங்களின் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை ஏறெடுத்தும் பார்க்காத அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது … பொருளாதார பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் சட்ட பாதுகாப்பு என்பது நாடு முழுவதும் இல்லாத சூழ்நிலையில் தான் இருக்கிறது … எனவே மேற்படி உள்ள சூழ்நிலையில் நம் சமூகத்தின் மாற்றத்தில் நமது கூட்டமைப்பு எப்போதும் முதன்மையில் நிற்க்க தயாராக இருக்கிறது … அதை நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அமைப்புக்கள் அனைவரும் நமது கூட்டமைப்பிற்க்கு ஆதரவு கொடுத்து இணைந்து செயல்பட்டால் நமக்கான உரிமைகளை நாம் உடனே பெற இயலும் … எனவே நமது ஒற்றுமையை ஓங்க செய்ய மற்ற அமைப்புகளுக்கு நம் கூட்டமைப்பில் சகோதர அமைப்பாக இணைந்து பணியாற்ற மாநில தலைமை சார்பாக அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்தார் …

முப்பெரும் விழாவின் தீர்மானங்கள் 

 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் 5% இட ஒதுக்கீட்டை வழங்கி அதனை முறைப்படுத்த தனியாக கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்…

 மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற துறைகளை போல அரசியலிலும் தனியாக பிரதிநிதித்துவம் 5% இட ஒதுக்கீடு கிடைக்கும் படி சட்டம் இயற்ற வேண்டும்…

 கொரோனா நோயின் தாக்கம் காரணமாக பல இலட்சம் மாற்றுத்திறனாளிகள் வேலை இழந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் இணைந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும்…

 மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை முறையாக இயக்கவும் வாரியத்தின் நலதிட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் சமூகம் பயன்படும் வகையில் எங்களை போன்ற கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கருத்து கேட்டு உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் .‌.

 தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் …

 அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட வேண்டும் …

 மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு சட்ட பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. அதனை போக்க தமிழக அனைத்து காவல் துறையினருக்கும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 – பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகைகளை செய்ய வேண்டும் … உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…

விழாவின் இறுதியாக மேற்படி முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற முக்கிய காரணமாக இருந்த …

மதுரை மாவட்ட செயலாளர். பெண் சிங்கம்.
M. நாகஜோதி அவர்கள் நன்றியுரை வழங்கினார் … விழா இனிதே நிறைவு பெற்றது …

இப்படிக்கு …

வழக்கறிஞர்
திண்டுக்கல்
M. முகமது அனஸ் M.A. B.L.,
மாநில தலைவர்

தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பு – ( TMSNK ) – தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks