பொள்ளாச்சியில் பாதாளச் சாக்கடை பணிகள் பல இடங்களில் நடைபெறுவதால் கனரக வாகனங்கள் குறுகிய பாதைகளில் திருப்பிவிடப்படுகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொள்ளாச்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆமையைவிட மிகவும் மெதுவாக பாதாளச் சாக்கடைபணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகளான மார்க்கெட் ரோடு, கடைவீதி, புதியதிட்ட சாலை, வெங்கட்ராமன் வீதி போன்ற வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  கேரளா போன்ற பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் நகரின் குறுகிய பாதைகளில் திருப்பிவிடப்படுகிறது. இராஜாமில் ரோடு, நேதாஜி ரோடு, மார்கெட் ரோடு போன்ற பாதைகளில் இருக்கும் மின் கம்பங்கள் உரசும் அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி வருவதால் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே கனரக வாகனங்களை குறுகிய பாதைகளில் திருப்பிவிடக்கூடாது என வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks