truetamilnews.com

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம் நடத்தப்பட்டது.

வரும் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஓபிஎஸ் வருகையின்போது ‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு’ என கோஷம் தொண்டர்கள் எழுப்பியுள்ளனர். வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். என முழக்கமிட்டு ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் ஈபிஎஸ் வரும்போது ‘நிரந்தர முதல்வர் எடப்பாடியார்’ என தொண்டர்கள் முழங்கினர். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் தொண்டர்களின் இத்தகைய இருவேறான கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பதில் முடிவு எட்டப்படவில்லை என்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks