தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இம்முறை கொரோனா தொற்று பரவல் காரணத்தால் இந்நிகழ்ச்சி நடத்தப்படுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்நிகழ்ச்சியை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் கடந்த சில வாரங்களாக விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

பிக்சீசன் 4 நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வலம்வரத் தொடங்கி விட்டன.

அதில், நடிகை சுனைனா, அதுல்யா, நடிகை கிரண், குக் வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன், வித்யூலேகா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இன்னும் உறுதி செய்யவில்லை.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த முறை கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.


ஆனால் இம்முறையும் அவரே தொகுப்பாளராக இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks