truetamilnews.com

செப்டம்பர் 19-இல் இந்த வருடத்தின் ஐ.பி.எல் விறுவிறுப்பாக தொடங்கவுள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறித்தனமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில மாதங்களாக களத்தில் இல்லாத தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். முக்கியமாக இந்தியாவின் சிறந்த டாப் 5 வீரர்களில் தோனியும் ஒருவர்.

இந்த தொடரில் கேப்டன் பொறுப்பில் இருக்கும் தோனிக்கு அதிக பொறுப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிறந்த கேப்டனாக தோனியும், ரோகித் சர்மாவும் திகழ்கின்றனர்.

ரோகித் இதுவரையில் 4 முறை அணிக்கு கோப்பை வென்று கொடுத்துள்ளார். தோனி மூன்று முறை பெற்றுள்ளார். முதல் ஆட்டத்திலேயே மும்பை இந்தியன்ஸ் உடன் எதிர்கொள்ளப் போகும் சென்னை சூப்பர் கிங்ஸின் கிங்ஸ் அணியின் போட்டியாளர்களை தற்போது வரிசைப்படுத்தி உள்ளோம்.

முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்ள போவதற்கு, இந்த 11 வீரர்களை இறங்கினால் வெற்றி பெறலாம் என்று அரசல் புரசலாக கணிக்கப்பட்டுள்ளது, இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கமெண்டில் தெரிவிக்கவும்.

1). முரளி விஜய்,

2). வாட்சன்,

3). அம்பத்தி ராயுடு,

4). ஃபேப் டு பிளேசிஸ்,

5). தோனி,

6). ரவீந்திர ஜடேஜா,

7). பியூஸ் சாவ்லா,

8). டுவைன் பிராவோ,

9). லுங்கி இங்கிடி,

10). ஷர்துல் தாகூர்,

11). தீபக் சஹர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks