truetamilnews.com

சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் துர்கா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 2010ம் ஆண்டு சார்லஸ் என்பவருடன் திருமணமாகி, அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர். அதன்பிறகு, 2015ம் ஆண்டு முதல் திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவருடன் துர்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து சென்னை அயனாவரத்தில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். விஜயபாரதி அடிக்கடி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு துர்காவைத் துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது ஆபாசப் புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா கடந்த ஜூலை மாதம் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது அம்மாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அப்போதும் விடாமல் தொலைபேசி மூலம் பணம் வேண்டும் என தொடர்ந்து விஜயபாரதி தனது மனைவி துர்காவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் துர்காவின் நிர்வாணப் புகைப்படத்தை பேஸ்புக்கில் விஜயபாரதி வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த துர்கா, கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். துர்காவின் உறவினர் ஸ்ரீதரன் கொடுத்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியைத் தேடி வந்தனர். விஜயபாரதியைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்தபோது பலமுறை நான் வெளியூரில் உள்ளேன் என தொடர்ந்து பொய் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இவர் சென்னையில் இருப்பதை அறிந்த அயனாவரம் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது, ஃபேஸ்புக்கில் நிர்வாணப் படத்தை வெளியிட்டது ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அயனாவரம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks