truetamilnews.com

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பொகலூர் எட்டவயல் கிராமத்தை சார்ந்தவர் வேலு. இவரது மனைவி தெய்வானை (வயது 55). இவர் கடந்த 2019 ஆம் வருடத்தின் நவம்பர் 29 ஆம் தேதி, அங்குள்ள வயல் பகுதியில் பணிக்காக சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு அவர் திருப்பததால், குடும்பத்தினர் தெய்வானையை தேடி வயல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு, சகதியில் மூழ்கியபடி தெய்வானை பிணமாக இருந்துள்ளார். மேலும், அவரது கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகளும் மாயமாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையில், தீயனூர் காலனி பகுதியை சார்ந்த லாரி ஓட்டுநர் ரவி (வயது 36) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையில், மது போதையில் தெய்வானையிடம் ரவி தவறாக நடக்க முயற்சித்த நிலையில், தெய்வானை காமுகனை எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொடூரன், அவரின் தலையில் அடித்துள்ளான்.

நிலைகுலைந்து மயங்கி விழுந்த தெய்வானையை, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகையையும் எடுத்துவிட்டு, தலையை வயல் நிலத்தினுள் அழுத்தி கொலை செய்து தப்பி சென்றுள்ளான். மேலும், மது போதை நேரத்தில் கண்களில் படும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் பழக்கத்தை கொண்ட சைக்கோ என்றும் தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks