truetamilnews.com

ஆபாச பட விவகாரத்தில் திருச்சி கால்நடை மருத்துவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், சேர்ப்பன் காலனியில் வசித்து வந்த மணப்பாறை அரசு கால்நடை மருத்துவர் அருண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் ஆபாசப் படங்களை டவுன்லோட் செய்து பகிர்ந்து வருவதை சமூக ஊடக தல கண்காணிப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து கண்டோன்மென்ட் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மருத்துவர் அருண் மீது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப் பட, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து அருணை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks