குளிப்பதற்கு எதற்காக என்று தெரியாமல் பல பேர் குளிக்கின்றனர்.

உடம்பில் உள்ள அழுக்கை நீக்கவா இல்லை.சரி அப்புறம் ஏன் குளிக்கின்றோம்.குளியல் என்றால் குளிர்வித்தல் என்று பொருள்.குளிர்வித்தல் காலப்போக்கில் குளியல் என்று ஆனது.

மனிதர்களுக்கு வரும் 75% நோய்களுக்கு காரணம் உடலில் உள்ள  வெப்பம்.இரவு தூங்கி எழும்போது உடலில் வெப்பக் கழிவுகள் இருக்கும்.அதை நீக்க குளிர்ந்த நீரில் குளிக்கின்றோம். அந்த நேரத்தில் வெந்நீரில் குளிக்க கூடாது.

 எண்ணைக் குளியலின் போது மட்டும் மிதமான வெந்நீரை பயன்படுத்தலாம்.குளிக்கும் போது குளிர்ந்த நீரை அப்படியே எடுத்து தலையில் ஊற்றிவிடக் கூடாது.முதலில் காலில் ஊற்ற வேண்டும். பின் முழங்கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதி, இறுதியில் தலையில் ஊற்ற வேண்டும்ஏன் இப்படி எல்லாம் செய்ய வேண்டும்.

முதலில் காலில் இருந்து ஊற்றினால் தான் உடல் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி கண் மற்றும் காது வழியாக வெளியே சென்று விடும். எடுத்தவுடன் தலையில் ஊற்றினால் வெப்பம் கீழே சென்று வெளியே செல்ல முடியாமல் உடலின் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

 இப்பொழுது நம் முன்னோர்கள் குளிக்கும் முறையை நம் நினைவிற்கு கொண்டு வருவோம்.

ஆறு அல்லது குளத்தில் தான் குளிப்பார்கள். ஒவ்வொரு படியாக குளத்தில் இறங்கும் போது கீழிருந்து மேலாக வெப்பம் வந்து கடைசியில் தலை முங்கும்போது உடல் வெப்பம் கண், காது வழியாக வெளியேறிவிடும்.

குளத்தில் இறங்கும் முன் உச்சந்தலையில் தண்ணீர் தெளித்து விட்டு அதன் பின் இறங்குவார்கள்.

அது ஏன் என்றால் உச்சியில் அதிகமாக சூடு ஏறிவிடக் கூடாது என்றுதான்.

மற்றும் தலை எப்பவும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

அப்படி உச்சந்தலையில் தண்ணீர் தெளித்து விட்டு குளத்தில் இறங்கும் போது உடல் வெப்பம் தலையை தாக்காமல் கீழிருந்து மேலாக கண் மற்றும் காது வழியாக வெளியேறி விடும்.

 நம் முன்னோர்கள் எது செய்தாலும் அதில் அர்த்தங்கள் இருக்கும் குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத்துணியோடு இருப்பது நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு ஏற்பட்டால் அனைத்து நோய்களும் ஒடிவிடும். புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளிப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.குளியல் அறையில் குளிக்கும் போது ஒரு ஹீட்டர் வேர, இந்த மாதிரி சுடு தண்ணீரில் சோப்பையும், ஷாம்பையும் போட்டு குளித்தால் நாம் நோயாளியாகத்தான் மாறுவோம்.

குளிப்பதற்கு நல்ல நேரம் – சூரியன் உதிப்பதற்கு முன்

குளிப்பதற்கு மிகச்சிறந்த நீர் – பச்சைத் தண்ணீர் 

குளித்தல் – உடலை குளிர்வித்தல்

 
குளிப்பது அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க
உங்களின் உடல் மீது அக்கறை இருந்தால் குளிக்கும் முறையை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த முறையை பின்பற்றுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks